TOMORROW IS OURS - SERIES 2
கோப்பையை வெறுமையாக்கு- PART 1 "ஹாய் ! யங்ஸ்டர்ஸ் எப்படி இருக்கீங்க ?"....."அடப்போங்க சார் ..!நீங்க வேற கடுப்பேத்தாதிங்க!"..... இதுதான் பெருபாலும் இளைஞர்களின் பதிலாக இருக்கிறது .நான் இப்போது பேசுவது கூட அதிகப்பிரசங்கி தனமாக தெரியலாம் ."விலகு! விலகு ! காத்து வரட்டும் " எனக்கூட நீங்கள் பேசிக்கொள்ளலாம். இன்றைய பெற்றோர் பெரும்பாலும் ,"நான் எது சொன்னாலும் காது கொடுத்து கேட்க மாட்டேங்குறான் " என்று கூறுவதைக் கேட்கலாம் . அப்படி என்றால் என்ன பொருள் ? இன்றைய இளைஞர்கள் தங்கள் காதுகளை மூடிக் கொண்டு இருக்கிறார்கள் என்று கூறுவதா ? அல்லது கேட்டு கொண்டிருக்கிறார்கள் என்று கூறுவதா ? இதனால் தான் பெற்றோர் , "உனக்குப் புரியுதா ?உன் காதில் விழுகுதா ? உன் மண்டையில் உரைக்குதா ? உன் காது என்ன செவிடா ?" என்று அடுக்கடுக்கான வசைமொழிகளால் கேள்விகளை முன் வைக்கின்றன . கடைசியா "ஏண்டா எருமை மாடு போல நிக்குற ?" என வசைபாட பையனும் ,"என் அப்பா அம்மா நீங்கதானே " எனச் சொல்ல , மீண்டும் பெற்றோர் பிள்ளைகளை முட்டு த...